உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி!

விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி!


விஜய் மில்டன், ரப் நோட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. இது ‛கோலி சோடா' படங்களின் தொடர்ச்சியாக இருக்கும். ஏற்கனவே இந்த படத்தில் ஆரி, பரத், சுனில், பால் டப்பா இணைந்திருந்தனர். தொடர்ந்து தற்போது இதில் நடிகை அம்மு அபிராமி இணைந்ததாக படக்குழு இன்று அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலி சோடா வெப் தொடரில் அம்மு அபிராமி நடித்திருந்தார். இப்போது இரண்டாம் முறையாக விஜய் மில்டன் இயக்கத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !