மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
104 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
104 days ago
கடந்த வருடம் பாலிவுட்டில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'அனிமல்'. அந்த படத்தில் ப்ரெட்டி பாட்டில் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் உபேந்திரா லிமாயே ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்றார். கடந்த 25 வருடங்களாக மராத்திய மற்றும் ஹிந்தி மொழி படங்களில் மாறி மாறி நிறுத்துவது மிக 20 வருடங்களுக்கு முன்பே தமிழில் விஷால் நடித்த சிவப்பதிகாரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த வருடம் வெங்கடேஷ் நடிப்பில் வெளியான 'சங்கராந்திக்கு வஸ்துனம்' படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கிலும் நுழைந்தார் உபேந்திரா. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக கன்னடத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார் உபேந்திரா லிமாயே. ஏற்கனவே அங்கே உபேந்திரா என்கிற பிரபல நடிகர் இருக்கும் நிலையில் இப்போது கன்னடத்தில் நுழைந்துள்ள இந்த பாலிவுட் நடிகர் உபேந்திரா, நடிகர் ரிஷி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் அவர் சப்தங்களை கேட்டாலே நடவடிக்கைகளில், உணர்ச்சிளில் மாற்றம் ஏற்படக்கூடிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வில்லன் என்றாலும் கூட இவரது கதாபாத்திரத்தில் சற்றே காமெடி கலந்து இருக்கும். இந்த படத்தை இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் உதவியாளரான கிஷோர் என்பவர் இயக்குகிறார். கன்னடத்தில் நடிப்பது குறித்து மராத்திய நடிகரான உபேந்திரா கூறும்போது, ''கன்னடம் என்னுடைய தாய் மொழி'' என்று கூறியுள்ளார். சும்மா பேச்சுக்காக அவர் கூறவில்லை. அவரது அம்மா பிறந்த ஊர் கர்நாடகாவில் உள்ள பெல்ஹாம் என்பதால் தான் அப்படி கூறியுள்ளார் உபேந்திரா.
104 days ago
104 days ago