சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி!
ADDED : 149 days ago
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'ரெட்ரோ' படத்திற்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய தனது 45வது படத்தில் நடித்து வந்தார் சூர்யா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். ஆன்மிகம் கலந்த கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்திற்காக 'வேட்டை கருப்பு, பேட்டைக்காரன்' போன்ற டைட்டில்களை பரிசீலித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, கடைசியாக 'கருப்பு' என்ற டைட்டில் வைக்க முடிவெடுத்திருந்தார். அதன்படி, இன்று தனது பிறந்த நாளை ஒட்டி இந்த சூர்யா 45வது படத்துக்கு 'கருப்பு' என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதை அவர் அறிவித்துள்ளார். இது குறித்த போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆர். ஜே. பாலாஜி.