உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!


விஜய் ஆண்டனி நடித்த மார்கன் படம் ஜூன் 27ம் தேதி வெளியாக உள்ளது. அவர் மருமகன் அஜய் வில்லனாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். சித்தர்கள், அவர்களின் வலிமை, ஆமை, தண்ணீர் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. மருமகன் வில்லனாகவும், மாமா விஜய் ஆண்டனி குற்றங்களை கண்டு பிடிக்கும் போலீஸ் அதிகாரியாகவும் வருகிறார்கள்.
கூடு விட்டு கூடு பாயும் வித்தை, சித்தர் தவ வலிமை யுக்திகளால் வில்லன் என்ன செய்கிறார். ஏன் அப்படி மாறினார் என கதை நகர்கிறதாம். இந்த படத்துக்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கினர். வரிசையாக தோல்வி படம் கொடுத்து வரும் விஜய் ஆண்டனி இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !