'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடிப்பில் நேற்று திரைக்கு வந்த படம் 'குபேரா'. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. என்றாலும் இந்த படம் நேற்று முதல் நாளில் தெலுங்கில் 10 கோடியும், தமிழகத்தில் 3.5 கோடியும் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் நேற்று வெளியான 'டிஎன்ஏ' படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. என்றாலும் கூட இந்த 'டிஎன்ஏ' படம் நேற்று முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 43 லட்சம் மட்டுமே வசூலித்திருக்கிறது. இதேபோல், அமீர்கான் நடிப்பில் நேற்று வெளியான 'சிதாரே ஜமீன் பர்' என்ற படம் தமிழகத்தில் 5 லட்சம் மட்டுமே வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.