உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோலிவுட் பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்த ரவி மோகன் - பாடகி கெனிஷா!

கோலிவுட் பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்த ரவி மோகன் - பாடகி கெனிஷா!


நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி தம்பதிகளுக்கிடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் பாடகி கெனிஷாவுடனான தன்னுடைய காதலை மறைமுகமாக வைத்திருந்த ரவி மோகன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ஜோடியாக கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு அளித்த ஒரு பேட்டியில், கெனிஷா தனக்கு கிடைத்த சிறந்த வாழ்க்கை துணை என்றும் கூறினார்.

இப்படியான நிலையில் பாடகி கெனிஷா 'அன்றும் இன்றும்' என்ற பெயரில் ஒரு ஆல்பம் வெளியிட்டார். அதில் பாடலை பாடியது மட்டுமின்றி இசையமைத்து நடனமும் ஆடியிருந்தார். இந்த ஆல்பத்தில் ரவி மோகனும் கேமியோவாக தோன்றினார். இந்த ஆல்பத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து ஹிட் அடித்திருக்கிறது.

இந்த நிலையில், தங்களது சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக ரவி மோகனும், பாடகி கெனிஷாவும் கோலிவுட் பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார்கள். அதில், நடிகர் மாதவன், இசையமைப்பாளர்கள் டி.இமான், தரண் குமார், இயக்குனர் சுகா கொங்கரா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த பார்ட்டியின்போது தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையப் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார் பாடகி கெனிஷா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !