மேலும் செய்திகள்
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
103 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
103 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
103 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
103 days ago
விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன் மற்றும் பலர் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் படம் 'ஜன நாயகன்'. அடுத்த வருடம் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் முதல் வீடியோ முன்னோட்டம், இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடு இரவில் வெளியிடப்பட்டது.
டீசரின் ஆரம்பத்தில் மேடைகளில் விஜய் பேச ஆரம்பிக்கும் போது சொல்லும் 'என் நெஞ்சில் குடியிருக்கும்' என்ற விஜய்யின் பின்னணிக் குரலில், “ஒரு உண்மையான தலைவர் அதிகாரத்திற்காக எழுவதில்லை, ஆனால் மக்களுக்காக…” என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது.
விஜய் நிஜ வாழ்க்கையில் பேசும் வசனமும், வீடியோவில் இடம் பெற்றுள்ள வாசகங்களும் இது அரசியல் பேச உள்ள படம் என்பதை உணர்த்துவதாக உள்ளது.
தற்போது யு டியூப் தளத்தில் 4 மில்லியன் பார்வைகளை இந்த டீசர் கடந்துள்ளது. 24 மணி நேரத்தில் எவ்வளவு பார்வைகளைப் பெறப் போகிறது, புதிய சாதனையைப் படைக்குமா என விஜய் ரசிகர்கள் காத்துள்ளார்கள்.
103 days ago
103 days ago
103 days ago
103 days ago