உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐமேக்ஸில் வெளியாகும் வார் 2

ஐமேக்ஸில் வெளியாகும் வார் 2

ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து 2019ம் ஆண்டு வெளியான படம் வார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த வருடத்திலிருந்து வார் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். நாயகியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.

யஷ் ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இவ்வருடம் ஆகஸ்ட் 14ம் தேதியன்று திரைக்கு வருகிறது. படம் வெளியாக 50 நாட்கள் உள்ளன. இதனிடையே இத்திரைப்படம் உலகமெங்கும் உள்ள ஐமேக்ஸ் தொழில்நுட்ப கொண்ட திரைகளிலும் வெளியிடுவதாக போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !