மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
96 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
96 days ago
ஒரு கோவிலுக்கு சொந்தமாக யானை இருப்பது பெருமையாக கருதப்பட்டது. ஆனால் தற்போது விலங்கின ஆர்வலர்கள் யானைகளை கோவிலில் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதோடு கோவில் யானைகளுக்கு மதம் பிடிப்பதும் பாகர்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. பல கோவில்கள் யானையின் பராமரிப்பு செலவு சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது.
இந்து நிலையில் தற்போது கோவில் வாசலில் இயந்திர யானைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. பார்ப்பதற்கு நிஜமான யானை தோன்றும் இவற்றுக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பும் இருக்கிறது.
இந்த நிலையில் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா ஜூலை 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இக்கோயிலுக்கு இயந்திர யானை ஒன்றை நடிகை திரிஷா வழங்கியுள்ளார். இந்த இயந்திர யானைக்கு கஜா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நிஜ யானையைப் போலவே தோற்றமளிக்கும் இந்த இயந்திர யானை, தனது பெரிய காதுகளையும், தும்பிக்கை, வால் போன்றவற்றையும் ஆட்டுகிறது. தும்பிக்கையால் தண்ணீர் பீச்சி அடிப்பதோடு ஆசிர்வாதமும் வழங்குகிறது. இந்து யானையை அந்த பகுதி மக்கள் 'திரிஷா யானை என்று குறிப்பிடுகிறார்கள்.
96 days ago
96 days ago