உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை

கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை


மோகன்பாபு மகன் மனோஜ் மஞ்சு நடிப்பில் வெளியாகி உள்ள கண்ணப்பா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ப்ரீத்திமுகுந்தன். இவர் திருச்சி பொண்ணு. அம்மா டாக்டர். இதற்குமுன்பு தமிழில் கவின் நடித்த ஸ்டார் படத்தில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த பெரிய பட்ஜெட் படம் கண்ணப்பா. இது புராண கதையாக இருந்தாலும் ப்ரீத்தி முகுந்தன் சம்பந்தப்பட்ட காட்சிகள், பாடல்கள், கவர்ச்சி பேசப்பட்டது. ஆனால், ஏனோ படக்குழு அவரை பற்றி எதுவும் பேசவில்லை.

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ப்ரீத்தி கலந்து கொள்ளவில்லை. ப்ரீத்தியின் போட்டோக்களை கண்ணப்பா குழுவும் விளம்பரப்படுத்தவில்லை. அவரை திட்டமிட்டு நீக்கியுள்ளது. கண்ணப்பா குழுவுக்கும், அவருக்கும் சம்பளம் பிரச்னையா? ஈகோ அல்லது வேறு பிரச்னையா? என்று பலரும் கேட்கிறார்கள். கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !