மகன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா
ADDED : 95 days ago
விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடிக்கும் பீனிக்ஸ் வீழான் படம் நாளை வெளியாகிறது. இதில் விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார். அவர் கவுரவ வேடத்தில் வருகிறார் என ஒரு தரப்பு சொல்கிறது. இன்னொரு தரப்போ அவர் நடிக்கவில்லை. மகன் தனித்து தனது உழைப்பால் முன்னேற வேண்டும் என நினைக்கிறார். அதனால் ஒரு சீனில் கூட நடிக்கவில்லை என்கிறார்கள். தவிர, இது சூர்யா சேதுபதி நடிக்கும் முதல் படம் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அவரோ நானும் ரவுடிதான், சிந்துபாத் உள்ளிட்ட தனது அப்பா படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார் என்பது பலரும் அறியாத ரகசியம். விஜய் சேதுபதி மகளும் சினிமாவில் நடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்சேதுபதி மனைவியும் மீடியாவில் பணியாற்றி இருக்கிறார். ராஜ் டிவி, தனியார் எப்எம்மில் பல ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்தவர்.