உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ

விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ


தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தில் ராஜூ. பல தெலுங்கு முன்னணி நடிகர்களை வைத்து பிரம்மாண்டமாக அடுத்தடுத்து படங்களை தயாரித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் இவர் தயாரித்த 'கேம்சேஞ்சர்' படம் தோல்வியடைந்தது. முன்னதாக தில் ராஜூ தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' படம் ஓரளவு நல்ல வசூலை தந்தது.

விஜய் பற்றி தில் ராஜூ கூறியதாவது: விஜய் சார் படப்பிடிப்பு நாட்களின் எண்ணிக்கையை விதியாகவே நேரடியாக கொடுத்துவிடுகிறார். அவருடைய கொள்கைபடி 6 மாதங்கள்; ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் படப்பிடிப்புக்கு என்று கொடுக்கிறார். இதனை மற்ற நாயகர்களும் பின்பற்றினால் தயாரிப்பாளர்களுக்கு பொன்னான வாய்ப்பாக இருக்கும். தெலுங்கு திரையுலகில் இப்படியொரு முறை கிடையாது. இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !