உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாமன் படத்தை பின்பற்றும் '3BHK'

மாமன் படத்தை பின்பற்றும் '3BHK'

சூரி நடித்த மாமன் படத்துக்கு முதலில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும், நல்ல படம் எடுத்து இருக்கிறோம். நீங்க தியேட்டருக்கு வந்து பாருங்க என்று சூரியும், படக்குழுவினரும் ஊர், ஊராக போய் பேசினார்கள். படத்தை நன்றாக பிரமோட் செய்தார்கள். பின்னர், படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி நடித்த '3BHK' படத்துக்கும் எதிர்பார்த்த ஓபனிங் இல்லை. அதனால், படக்குழுவினர் பல்வேறு ஊர்களுக்கு சென்று படம் குறித்து பேசி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு சரத்குமார், தேவயானி சென்றது இல்லை. ஆனாலும், தங்கள் படம் ஓட வேண்டும் என்பதால் அவர்களும் தேதி கொடுத்து படக்குழுவினருடன் மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று இருக்கிறார்கள்.

சென்னையில் இன்று நன்றி அறிவிப்பு விழாவும் நடக்கிறது. முதல் ஒரு வாரம் படத்தை தாக்குபிடித்து ஓட வைத்துவிட்டால், அடுத்த சில வாரங்களில் நல்ல வசூல் வரும் என்று படக்குழு நம்புவதால் இந்த ஏற்பாடு. அடுத்து ராம் இயக்கிய பறந்து போ படக்குழுவும் நன்றி அறிவிப்பு விழா நடத்த தயாராகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !