பிரபாஸ் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா!
ADDED : 93 days ago
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற 'காவாலா' பாடலில் நடனமாடிய பிறகு 'ஸ்டிரி 2, ரெய்டு 2' படங்களிலும் தமன்னா சிறப்பு பாடலுக்கு நடனமாடினார்.
தமன்னாவிற்கு தொடர்ந்து சிறப்பு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்புகள் வருகிறது. தற்போது தெலுங்கில் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் 'தி ராஜசாப்' படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு நடனமாட தமன்னாவை அணுகி படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.