உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு

சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு

கன்னட சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் சிவராஜ் குமார். நேற்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 131வது படத்தை அறிவித்துள்ளனர். இந்த படத்தை தமிழில் ‛பாயும் ஒளி நீ எனக்கு' என்கிற படத்தை இயக்கிய கார்த்திக் அத்வைத் இயக்குகிறார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இதன் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஆனால் படத்திற்கு இன்னும் தலைப்பை அறிவிக்கவில்லை. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து படப்பிடிப்பு நடக்க உள்ளது. படத்தின் போஸ்டரில் சிவராஜ்குமார் துப்பாக்கி தயாரிப்பது போன்று உள்ளது. மேலும் பின்னணியில் நிறைய துப்பாக்கிகளும் காணப்படுகின்றன. இதை வைத்து பார்க்கையில் இப்படம் ஒரு அதிரடியான ஆக் ஷன் கதைக்களத்தில் கேங்ஸ்டர் அல்லது போலீஸ் பின்னணியில் உருவாகும் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !