தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி!
ADDED : 137 days ago
போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் அவரது 54வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜனின் மகனுமான பிரித்வி பாண்டியராஜன் நடிக்கிறார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பிரித்வி பாண்டியராஜன், புது நாள், புது வாய்ப்பு. தனுஷ் சாரின் 'D54' படத்தில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். இந்த சந்தோஷமான விஷயத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. வாய்ப்பளித்த இயக்குநர் விக்னேஷ் ராஜாவிற்கு நன்றி. வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.