சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள்
ADDED : 145 days ago
சுள்ளான் நடிகர் நடித்த பல படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வந்ததால், 30 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளத்தை உயர்த்த முடியாமல், தடுமாறி வந்தார். தற்போது அவர் நடித்துள்ள, மூன்று எழுத்து படம் வெற்றி பெற்றுள்ளதால், ஒரே படத்தில் சம்பளத்தை, 50 கோடி ரூபாய் ஆக்கிவிட்டார்.
ஆனால், இந்த சம்பளத்தை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய, பாலிவுட்டில் சிலர் தயாராக உள்ளனர். இருப்பினும், கோலிவுட் தயாரிப்பாளர்களோ, 'இவர் நம்முடைய பட்ஜெட்டுக்குள் அடங்க மாட்டார்...' எனச் சொல்லி, சுள்ளான் நடிகரை வைத்து படம் தயாரிக்க இருந்தவர்கள், வேறு நடிகர்களை நோக்கி, 'யுடர்ன்' போட்டு வருகின்றனர்.