வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்!
ADDED : 91 days ago
தென்னிந்திய சினிமாவின் ஷோமேன் என்று பாராட்டப்பட்டு வந்த இயக்குனர் ஷங்கர், ‛இந்தியன்- 2 , கேம் சேஞ்சர்' படங்களின் தோல்வியால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் சு.வெங்கடேசன் எழுதிய ‛வேள்பாரி' நாவலை அடுத்து படமாக்கப் போவதாகவும், அது தனது கனவு படம் என்றும் அறிவித்தார் ஷங்கர். அதோடு, வேள்பாரியை ஜேம்ஸ் கேமரூனின் ‛அவதார்' போன்ற உலகளாவிய படங்களுடன் ஒப்பிட்டார். அதோடு, ‛கேம் ஆப் த்ரோன்சை' விட பிரமாதமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
அவரது இந்த பேச்சு குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதோடு, இயக்குனர் ஷங்கர் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை செய்வதற்கு பதிலாக வலுவான படங்களை கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விமர்சித்து வருகிறார்கள்.