தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை'
ADDED : 92 days ago
கடந்த 2006ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் 'புதுப்பேட்டை'. தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படங்களை புதுப்பேட்டைக்கு முன், பின் என வகைப்படுத்தும் அளவிற்கு இப்படத்தின் தாக்கம் ரசிகர்களிடையே உள்ளது. புதுப்பேட்டை தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படங்களுக்கு ஒரு புதிய வரையறையை கொண்டு வந்தது.
தற்போது தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற ஜூலை 26ம் தேதியன்று புதுப்பேட்டை படத்தை ரீ மாஸ்டரிங் செய்து டிஜிட்டல் பொழிவில் 4K தரத்தில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றி வெளியிடுகின்றனர். இதை விஜய் சூர்யா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய நிர்மலா, சரவணபவா ரீ -ரிலீஸ் செய்கின்றனர்.