உடலை வருத்தும் சிம்பு
ADDED : 92 days ago
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த 'வாடிவாசல்' படம் கடந்த சில வருடங்களாக தயாரிப்பில் இருந்தது. ஒரு சில காரணங்களால் இந்த படம் தள்ளிப்போக இதற்கிடையில் தயாரிப்பாளர் தாணுவிற்கு புதிய படம் ஒன்றை நடிகர் சிலம்பரசனை வைத்து இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இத்திரைப்படம் வட சென்னையில் நடைபெறும் கதைகளத்தை மையப்படுத்தி உருவாகிறது. ஆனால், வட சென்னை 2 இல்லை என்பதை உறுதி செய்தார் வெற்றிமாறன்.
ஏற்கனவே இந்த படத்தின் புரோமோ ஷூட் நடைபெற்றது. இந்த படத்தில் சிம்பு இரண்டு தோற்றத்தில் தோன்றி நடிக்கவுள்ளார். அதில் ஒன்று இளமை தோற்றம், இதற்காக சிம்பு சுமார் 10 கிலோ உடல் எடையை குறைக்க உள்ளார். கடந்த சில வாரங்களாக சிம்பு இதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்கிறார்கள்.