அஜித்தின் 65வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்
ADDED : 92 days ago
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படத்தில் நடித்த அஜித் குமார், அதன்பிறகு கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் மீண்டும் அஜித் நடிக்கும் 64 வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் அஜித் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது அஜித்தின் 65வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. சூர்யா நடித்த ரெட்ரோ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் அதையடுத்து ரஜினியிடம் ஒரு கதை சொல்லி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அஜித்திடமும் ஒரு கதை சொல்லி ஓகே செய்துள்ளாராம். அதனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் அஜித் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.