ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம்
இந்த வாரம் வடிவேலு, பஹத் பாசில் நடித்த மாரீசன், பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த தலைவன் தலைவி, ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் பவன்கல்யாண் நடித்த ஹரிஹரவீரமல்லு உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இந்த 3 படங்களுமே சிலருக்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற பிரஷரில் ரிலீஸ் ஆவதாக கூறப்படுகிறது.
வடிவேலு நடித்த கேங்கர்ஸ் படம் ஹிட்டாகவில்லை. அவர் கதைநாயகனாக நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படமும் பெரிதாக ஓடவில்லை. அதனால், மாரீசன் மூலமாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் வடிவேலு.
விஜய்சேதுபதி நடித்த மகாராஜா நன்றாக ஓடினாலும், அடுத்து வந்த ஏஸ் இழப்பை சந்தித்தது. அதனால், விஜய்சேதுபதியும் ஹிட் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.
இந்தியளவில் பிரபல தயாரிப்பாளரான ஏ.எம். ரத்னம் கடும் பைனான்ஸ் நெருக்கடியில் ஹரிஹர வீர மல்லுவை தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில ஆண்டுகள் நடந்தது. ரிலீஸ் தேதி பலமுறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போது ஒருவழியாக படம் வெளியாக உள்ளது. இந்த படம் ஹிட் ஆகாவிட்டால், ஏ.எம். ரத்னம் எதிர்காலமே பாதிக்கப்படும் என்கிறார்கள்.