25வது நாளில் 'மார்கன்', சில நாட்களில் ஓடிடியில்…
ADDED : 92 days ago
லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஜய் திஷன், பிரிகிடா, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஜுன் 27ம் தேதி வெளியான படம் 'மார்கன்'. தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம் இன்று 25வது நாளைத் தொட்டுள்ளது.
இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளதாக நாயகன் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்த வாரம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இரண்டு மொழிகளிலும் இப்படம் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் ஆண்டனி நடித்து அடுத்து 'சக்தித் திருமகன்' படம் செப்டம்பர் 5ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது.