மேலும் செய்திகள்
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
47 days ago
கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த்
47 days ago
மோகித் சூரி இயக்கத்தில் புதுமுகங்கள் அஹான் பான்டே, அனீத் பட்டா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்திப் படம் 'சாயரா'. யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது நிகர வசூலாக மட்டும் 100 கோடியைக் கடந்துள்ளதாக பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக 130 கோடி வசூலைக் கடந்துள்ள இப்படம் இந்த வாரத்தில் 150 கோடியைக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடம் வெளிவந்த ஹிந்திப் படங்களின் வசூலைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலவரப்படி 7வது இடத்தில் உள்ளது. இந்த வார இறுதிக்குள் 5வது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 5 இடங்களில் 'ச்சாவா, சிதாரே ஜமீன் பர், ரெய்டு 2, ஹவுஸ்புல் 5, சிக்கந்தர்' ஆகிய படங்கள் உள்ளன.
47 days ago
47 days ago