மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
46 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
46 days ago
மலையாள திரையுலகில் நடிகர் திலீப் நடிப்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான 'பிரின்ஸ் அண்டு பேமிலி' திரைப்படம் அவருக்கு ஓரளவு வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து திலீப் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பா பா பா'. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் தனஞ்செய் சங்கர் இயக்கி வருகிறார். திலீப்புடன் வினித் சீனிவாசன் மற்றும் தியான் சீனிவாசன் சகோதரர்களும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். தமிழிலிருந்து ரெடின் கிங்ஸ்லி, சாண்டி மாஸ்டர் ஆகியோரும் இந்த படத்தின் மூலம் மலையாளத்திற்கு சென்றுள்ளார்கள்.
ஏற்கனவே நடிகர் மோகன்லால் இந்த படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக 'பா பா பா' படத்தின் படப்பிடிப்பில் மோகன்லால் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதில் அவர் என்ன விதமான சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது.
இந்த நிலையில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான பி உன்னிகிருஷ்ணன் சமீபத்தில் பா பா பா படத்தின் படப்பிடிப்பிற்கு மோகன்லாலை சந்திக்க சென்றதாகவும் அங்கே மோகன்லால் நடனம் ஆடும் அற்புதமான பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருவதாகவும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். ஒரு பாடல் காட்சியில் மட்டும் தான் மோகன்லால் வருகிறாரா அல்லது அதையும் தாண்டி கூடுதல் நேரம் இந்த படத்தில் பயணிக்கிறாரா என்பது படம் ரிலீஸ் ஆகும்போது தான் தெரிய வரும்.
46 days ago
46 days ago