மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
47 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
47 days ago
ஒரு நொடி படத்தை இயக்கிய பி. மணிவர்மனின் அடுத்த படம் ஜென்மநட்சத்திரம். இதிலும் தமன் தான் ஹீரோ. கடந்த ஜூலை 18ல் படம் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், படம் வெற்றி என் கூறி படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா நடத்தினர். வெற்றி விழா என்றால் விமர்சனங்கள் வரும் என்பதால், இப்போது நன்றி அறிவிப்பு என்ற பெயரில் விழா நடக்கின்றன.
விழாவில் பேசிய இயக்குனர் மணிவர்மன், “நினைத்ததை விட இந்தப் படம் நன்றாக போய் கொண்டிருப்பதால் படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த நன்றி தெரிவிக்கும் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். மல்டி பிளக்ஸ் திரையரங்கை விட சிங்கிள் ஸ்கிரீனில் படம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. நேரில் ஆடியன்ஸ் ரியாக்ஷன் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.'' என்றார்.
ஹீரோ தமன் பேசுகையில் “என்னுடைய முந்தைய படமான 'ஒரு நொடி' அதன் பட்ஜெட்டை எங்களுக்கு திரும்ப கொடுத்தது. ஆனால், 'ஒரு நொடி' படத்தின் மொத்த பட்ஜெட்டை 'ஜென்ம நட்சத்திரம்' படத்தின் மூன்று நாள் கலெக்ஷன் கொடுத்துள்ளது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படக்குழுவில் யாரும் சரியாக தூங்கவில்லை. ஆனால், படம் ரிலீஸ் ஆன பின்பு கலெக்ஷன் பார்த்த பின்புதான் நிம்மதியாக இருந்தது. தமிழ்நாட்டில் 150 திரையரங்குகளில்தான் முதலில் படம் திரையிட்டோம். மக்கள் கொடுத்த ஆதரவிற்கு பிறகு 200 - 250 என்ற எண்ணிக்கையில் ஸ்கிரீன் எண்ணிக்கை அதிகரித்தார்கள். ஒவ்வொரு படத்திலும் கற்றுக் கொள்ள விஷயங்கள் இருக்கும். ஆனால், இந்தப் படம் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தது.'' என்றார்.
உண்மையிலே படம் வெற்றியா? வசூல் அதிகரிக்க வேண்டும். இன்னும் பிரமோஷன் தேவை என்று இந்த மாதிரியான நிகழ்ச்சியை நடத்துகிறார்களா என யாருக்கும் பிடிபடவில்லை.
47 days ago
47 days ago