மேலும் செய்திகள்
விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா
53 days ago
250 கோடி வசூலைக் கடந்த 'லோகா'
53 days ago
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் வடிவேலு, பஹத் பாசில் இருவருக்கு இடையேயான காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து தற்போது மாரீசன் என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை சுதீஷ் சங்கர் என்பவர் இயக்கியுள்ளார். நாளை (ஜூலை 25) இந்த படம் வெளியாகிறது. ஆனால் இதில் நடித்த வடிவேலு மற்றும் பஹத் பாசில் இருவருமே படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர்.
அதே சமயம் வடிவேலு மட்டும் இரண்டு நாட்களாக சில சேனல்களில் தனிப்பட்ட முறையில் இந்த படம் குறித்து தற்போது தனி ஆளாக பேட்டி அளித்து வருகிறார். ஆனால் தமிழ் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு என தான் நடிக்கும் எந்த மொழி படங்களிலும் தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதவர் நடிகர் பஹத் பாசில். இந்த விஷயத்தில் அவரை இன்னொரு அஜித் என்று கூட சொல்லலாம். இந்த நிலையில் ஒரு வட இந்திய பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் மாரீசன் படம் குறித்து மனம் திறந்து உள்ளார் பஹத் பாசில்.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “இந்த படம் கொஞ்சம் செலவு வைக்கும் விதமாகத்தான் அமைந்தது. மிக நீண்ட லொகேஷன்கள், அடிக்கடி படப்பிடிப்பில் குறுக்கிட்ட மழை போன்றவற்றால் படப்பிடிப்பு தேதிகளையும் இடங்களையும் மாற்றி மாற்றி திட்டமிட வேண்டி இருந்தது. சில காட்சிகளை முன்கூட்டியே எடுக்க வேண்டியும் இருந்தது. படம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இதில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் யாரையும் நம்ப முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை உங்களால் யூகிக்க முடியாது. ஆனால் இந்த படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்கள் அனைவரையும் தாராளமாக நம்பலாம். இந்த படத்தை பொறுத்தவரை மிக அற்புதமாக எழுதப்பட்ட கதை. என்ன சொல்லப்பட்டதோ அதை படமாக எடுத்து இருக்கிறார்கள். படம் பார்க்கும் ரசிகர்கள் இதை எப்படி ரசிக்கப் போகிறார்கள் என்பதை பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
53 days ago
53 days ago