உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு

'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு

பாண்டிராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், விஜய்சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'தலைவன் தலைவி' படம் நேற்று தமிழில் வெளியானது. இப்படத்தை நேற்றே தெலுங்கிலும் 'சார் மேடம்' என்ற தலைப்பில் வெளியிடுவதாக முன்னர் அறிவித்திருந்தனர். ஆனால், நேற்று காலை வரை தெலுங்குப் பதிப்பிற்கான முன்பதிவு ஆரம்பமாகவில்லை. அது பற்றி எந்த ஒரு தகவலையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.

நேற்று இரவு 'சார் மேடம்' படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். பட வெளியீடு தள்ளி வைப்பதற்கான காரணம் எதையும் அவர்கள் கூறவில்லை. பவன் கல்யாண் நடித்து நேற்று முன்தினம் வெளியான 'ஹரிஹர வீரமல்லு' படத்துடன் போட்டியாக வெளியிடக் கூடாது என தள்ளி வைத்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !