கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன்
ADDED : 71 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் தான் நடித்துள்ள கேரக்டர் குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில், இந்த படத்தில் சத்யராஜின் மகளாக நடிக்கிறேன். நான் நடித்துள்ள பிரீத்தி என்ற கதாபாத்திரம் வலிமையானதாகவும், பெண்மை நிறைந்ததாகவும் இருக்கும். கண்டிப்பாக இந்த ரோலை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன். மேலும் இந்த படத்தில் நாகார்ஜுனா வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு நான் அவரது தீவிரமான ரசிகையாகி விட்டேன் என்கிறார்.