24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல்
ADDED : 114 days ago
குபேரா படத்திற்கு பின் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛இட்லி கடை'. இதை அவரே இயக்கி, டான் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் உடன் இணைந்து தயாரிக்கவும் செய்துள்ளார். நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் துவங்கி உள்ளன.
இந்நிலையில் இன்று தனுஷ் பிறந்தநாளையொட்டி இந்த படத்திலிருந்து ‛என்ன சுகம்' என்ற முதல் பாடலை நேற்று மாலை வெளியிட்டுள்ளனர். இதை தனுஷே எழுதி, பாடகி ஸ்வேதா மோகன் உடன் இணைந்து பாடியும் உள்ளார். மெலோடி பாடலாக இந்த பாடல் வெளிவந்துள்ளது. பாடல் வெளியான 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை பெற்று, டிரெண்ட் ஆனது.
இட்லி கடை படம் அக்., 1ல் ரிலீஸாகிறது.