அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து
71ம் ஆண்டுக்கான சினிமா தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் 'பார்க்கிங்' படம் 3 விருதுகளைப் பெற்றுள்ளது. 'வாத்தி' படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெறுகிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனால், பலரும் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'அயோத்தி' படத்துக்கு ஏன் விருது கொடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள இயக்குனர் மந்திரமூர்த்தி, ''அயோத்திக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி, அதேசமயம் பார்க்கிங் தரமான படம், விருதுக்கு உரிய படம். அதற்காக விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்'' என கூறியுள்ளார். அயோத்தி படம் விருது பட்டியலில் இருந்தது. ஆனால், அடுத்த கட்ட தேர்வுகளில் அது நகரவில்லை. அதனால் விருது கிடைக்கவில்லை. தமிழகத்தில் இருந்து ஒருவர் மட்டுமே விருது ஜூரியாக இருந்தார். டில்லியிலும் மற்ற மொழி ஜூரி ஆதிக்கம். அதனால், இந்தமுறை 4 விருது கிடைத்ததே பெரிய விஷயம். குறிப்பாக, எம்.எஸ்.பாஸ்கருக்கு போராடிதான் சிறந்த துணை நடிகர் விருது வாங்கியுள்ளனர் என தகவல் வருகிறது.