வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி
ADDED : 105 days ago
சின்னத்திரை தொடர்களில் நடித்தும், நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வந்தவர் சைத்ரா ரெட்டி. பெங்களூரு பெண்ணான இவர் சில கன்னடப் படங்களில் நடித்திருந்த நிலையில் அஜித்தின் 'வலிமை' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு 'விஷமக்காரன்' என்ற படத்தில் நாயகியாக நடித்தார். சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார்.
இந்த நிலையில் தற்போது 'லவ் ரிட்டர்ன்ஸ்' என்ற வெப் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக குரு லட்சுமணன் நடிக்கிறார். பர்வின் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சதாசிவம், அர்ஜுன் தேவ் இயக்குகிறார்கள். அமீன், இம்ரன் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்கள், சரிகம நிறுவனம் தயாரிக்கிறது.