உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாடகர் ஆனார் புகழ்

பாடகர் ஆனார் புகழ்

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் புகழ். யோகி பாபு போன்றே இவரது ஹேர் ஸ்டைலும் அவருக்கு வாய்ப்புகளை பெற்றுத் தருகிறது. தற்போது சினிமாவில் காமெடி கேரக்டர்களில் நடித்து வருகிறார். அவர் கதையின் நாயகனாக நடித்த 'சூ கீப்பர்' படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் புகழ் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பாடல் ஒன்றை முதல் முறையாக புகழ் பாடியுள்ளார். அவருடன் இணைந்து விருஷா பாலு, ஜகதீஷ் குமார் பாடியுள்ளனர். சுபாஷ் முனிரத்தினம் இசையமைத்துள்ளார். கலைக்குமார் பாடலை எழுதி உள்ளார். சாஜோ சுந்தர் படத்தை இயக்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !