மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர்
மலையாளத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு பட்டம் போல என்கிற படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன் அதன் பிறகு மலையாளத்தில் பெரிய அளவில் அவருக்கு படங்கள் வரவில்லை. அதன் பின்னர்தான் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறினார். அதன் பிறகு விஜய்யுடன் 'மாஸ்டர்'. தனுஷுடன் 'மாறன்' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகள் வரிசைக்கு உயர்ந்தவர் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழில் கார்த்திக்கு ஜோடியாக இவர் நடித்து வரும் 'சர்தார் 2' திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹிருதயபூர்வம்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் மாளவிகா மோகனன். இந்த படம் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.
அதேபோல தெலுங்கில் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'தி ராஜா சாப்' படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் இந்த படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த மூன்று படங்களும் வெளியானால் மாளவிகா மோகனனின் திரையுலக பட வரிசை இன்னும் கொஞ்சம் உயரும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று மாளவிகா மோகனனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன் அவர் சார்பாக ரசிகர்களுக்கு சர்தார் 2, தி ராஜா சாப் மற்றும் ஹிருதயபூர்வம் படத்தில் இருந்து அவரது அழகான போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.