உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன்

ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன்

நடிகர் தனுஷ் சில வாரங்களாக தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து அவர்களுக்கு விருந்து பரிமாறி வருகிறார். என்ன நடக்குது. அவருக்கும் அரசியல் ஆசையாக என விசாரித்தால் 'கடந்த சில ஆண்டுகளாக அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் விரும்பினர். அது ஏனோ நடக்கவில்லை. இப்போது அந்த ஆசையை நிறைவேற்றி வைத்து வருகிறார்.

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் போட்டோ எடுத்து, அவர்களுக்கு சைவ, அசைவ விருந்து, அவர்கள் குடும்பத்தினர்களுக்கு பட்டுப்புடவை, குழந்தைகளுக்கு சாக்லெட், ஸ்கூல் பேக் என உபசரிக்கிறார். இது ரசிகர் மன்றங்கள் மூலமாக திட்டமிட்டு நடத்தப்படுகிறது. கடந்த ஞாயிறு சென்னை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களுடன் போட்டோ, எடுத்தார். இந்த ஞாயிற்றுகிழமை புதுச்சேரி, கடலுார், விழுப்புரத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள், அவர்கள் குடும்பத்தினரை சந்தித்தார்.

இதுவரை 10 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார். 8 ஆண்டுகளுக்குபின் இந்த சந்திப்பு நடக்கிறது. இத்தனை ஆண்டுகள் தனக்காக விசில், கைதட்டல் கொடுத்த, பட ரிலீஸ் சமயத்தில் கட்அவுட், பேனர் வைத்த, சோஷியல் மீடியாவி்ல சப்போர்ட் ஆக இருக்கிற, தான் கஷ்டப்படுகிற காலத்தில் வாய்ஸ் கொடுக்கிற, தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக பல நல்ல காரியங்கள் செய்தவர்களுக்கு அவர் செலுத்தும் சின்ன நன்றி கடன் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !