ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா
ADDED : 57 days ago
மதராஸி படத்தை அடுத்து பராசக்தி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். இதன்பிறகு விநாயக் சந்திரசேகர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் ஆர்யாவை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். ஏற்கனவே ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடித்த எனிமி படத்தில் ஆர்யா எதிர்மறையான வேடத்தில் நடித்திருந்தார். மேலும், காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் என்ற படத்திற்கு பிறகு திரு மாணிக்கம் போன்ற படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த ஆர்யா, தற்போது மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.