அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் காட்டி. இதில் விக்ரம் பிரபு அவருக்கு ஜோடியாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் விஎப்எக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜூலை 11ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக அறிவித்தார்கள். ஆனால் வெளியாகவில்லை.
தற்போது படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். அதில் அனுஷ்கா, விக்ரம் பிரபு இருவரும் ஆக் ஷன் காட்சிகளில் அசத்தி உள்ளனர். கஞ்சா பின்னணியில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையாக இப்படம் உருவாகி உள்ளது. கூடவே படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். அதன்படி படம் செப்., 5ல் வெளியாகிறது.
இதே தேதியில் தெலுங்கில் தேஜா சஜ்ஜாவின் ‛மிராய்' என்ற படமும், தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸி படமும் திரைக்கு வருகிறது. அதனால் அனுஷ்காவின் காட்டி படம் இரண்டு படங்களுடன் நேருக்கு நேர் மோதுவது உறுதியாகி இருக்கிறது.