அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள்
ADDED : 54 days ago
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்குமார் கூட்டணியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'குட் பேட் அக்லி'. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என்பதை ஆதிக் சமீபத்தில் உறுதி செய்தார். இதை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என்பவர் தயாரிக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்திற்கு இசையமைக்க அனிரூத் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இளம் நடிகை ஸ்ரீலீலா உடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான சுவாசிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள்.