உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: மங்கம்மாவின் வெற்றியும், தோல்வியும்

பிளாஷ்பேக்: மங்கம்மாவின் வெற்றியும், தோல்வியும்

1943ம் ஆண்டு வெளியான படம் 'மங்கம்மா சபதம்'. ரஞ்சன், வசுந்தராதேவி. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடித்திருந்தார்கள். ஜெமினி வாசன் தயாரித்த இந்தப் படத்தை ஆச்சார்யா இயக்கினார். எம்.டி.பார்த்தசாரதி, எஸ்.ராஜேஸ்வர ராவ் இருவரும் இசையமைத்தார்கள். படத்தில் மொத்தம் 15 பாடல்கள். அனைத்துமே மிகப்பெரிய ஹிட் பாடல்களாக அமைந்து படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

1985ம் ஆண்டு கே.பாலாஜி தயாரிப்பில், கமல், சுஜாதா, மாதவி, சத்யராஜ் நடிப்பில் வெளியான 'மங்கம்மா சபதம்' தோல்வி அடைந்தது. என்றாலும் கமலின் நடிப்பும், சத்யராஜின் வில்லத்தனமும், சுஜாதாவின் அம்மா சென்டிமெண்டும் இப்போதும் படத்தை நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

தன் குடும்பத்தை அழித்தவர்களை பழிவாங்குவேன் என்று சபதம் எடுக்கும் மங்கம்மா, தன் மகனை கொண்டு சபதத்தை நிறைவேற்றுவதுதான் இரண்டு படத்தின் கதையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !