உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா

5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா

பஞ்சாபை சேர்ந்த மெஹ்ரின் பிரதிஸ்டா, தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழில் அதிக வாய்ப்பில்லாவிட்டாலும் பஞ்சாபி, ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். கடைசியாக தமிழில் 'பட்டாஸ்' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார்.

தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்திரா' என்ற படத்தில் வசந்த் ரவி ஜோடியாக நடித்துள்ளார். இயக்குனர் சபரீஷ் நந்தா இயக்கும் இந்தப் படத்தை ஜாபர் சாதிக் தயாரிக்கிறார். அஜ்மல் தஹஸீன் இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். சுனில் வர்மா, அனிகா சுரேந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !