மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
51 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
51 days ago
எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' படம்தான் தமிழின் முதல் வண்ணப்படம் என்று பலரும் கருதிக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதற்கு முன்பே ஒரு வண்ணப் படம் வெளியானது. அதாவது கருப்பு வெள்ளையில் கருப்பு நிறத்திற்கு பதிலாக சிபியா எனப்படும் பழுப்பு நிறம் கலந்து திரையிடப்பட்டது.
அந்த வகையில் 1938ம் ஆண்டு வெளிவந்த 'தர்மபுரி ரகசியம்' அல்லது 'ராஜதுரோகி' படமே முதல் வண்ணப் படம் என்ற பெருமையை பெறுகிறது. படத்தின் விளம்பரத்திலேயே 'இயற்கை வர்ணக் காட்சிகள் அடங்கிய முதல் தமிழ்ப்படம்' என்கிற வாசகம் இடம்பெற்றிருந்தது.
1930களில் புராண, சரித்திரக் கதைகள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், தமிழின் முதல் வண்ணப்படமான 'தர்மபுரி ரகசியம்', சமூகக்கதையாக எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் மோட்டார் பைக், ரிவால்வர் போன்ற நவீன அம்சங்கள் இடம்பெற்றதை அக்காலத்தில் ரசிகர்கள் மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு டாக்கீஸ் சார்பாக எஸ்.சவுந்தரராஜன் இந்தப் படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாகத் திகழ்ந்த சி.பி.ராமசாமி அய்யர் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டது.
51 days ago
51 days ago