உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி!

நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‛கூலி' படம் நாளை திரைக்கு வரும் நிலையில் தமிழகத்தைப் போலவே இந்த படத்தை தெலுங்கு ரசிகர்களும் மிகப் பெரிய அளவில் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். முக்கியமாக இந்த படத்தில் நாகார்ஜுனா முதன்முதலாக சைமன் என்ற வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் வில்லன் வேடத்தில் நாகார்ஜுனா நடித்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என்று கருதினார் லோகேஷ் கனகராஜ்.

அதோடு, ரஜினிகாந்த் இப்படத்தின் ஆடியோ விழாவில் பேசும்போது, நான் நடித்துள்ள தேவா வேடத்தை விட நாகார்ஜுனா நடித்துள்ள சைமன் வேடத்தில்தான் தான் நடிக்க விரும்பியதாக கூறினார். இப்படி இந்த வில்லன் வேடத்துக்கு ரஜினிகாந்த் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டதால் தற்போது நாகார்ஜுனாவின் தெலுங்கு ரசிகர்கள் இந்த கூலி படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து இருப்பதாக டோலிவுட் ஊடகங்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், நாளை ஜூனியர் என்டிஆர், ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள வார்-2 படம் வெளியானாலும், கூலி படமும் தெலுங்கில் பெரிய அளவில் வசூலிக்கும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !