மேலும் செய்திகள்
கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்'
48 days ago
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
48 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
48 days ago
நடிகர் ரஜினிகாந்திற்கு சினிமாவில் இது பொன்விழா ஆண்டு. 1975ல் கே பாலசந்தரின் ‛அபூர்வ ராகங்கள்' படம் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமாகி ஆகஸ்ட் 15ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த 50ம் ஆண்டு கொண்டாட்டத்தில் அவரின் ‛கூலி' படமும் நாளை வெளியாகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கமல் வாழ்த்து
நடிகர் கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவில், “சினிமாவில் அரை நூற்றாண்டு என்பது அற்புதமானது. என் அன்பு நண்பர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார். நமது சூப்பர் ஸ்டாரை நானும் பாசத்துடனும், பாராட்டுடனும் கொண்டாடுகிறேன். இந்த பொன் விழாவிற்கு ஏற்ற உலகளாவிய வெற்றியை கூலி திரைப்படம் பெற வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கூலி என் பயணத்தில் சிறப்பானது - லோகேஷ்
கூலி படத்தின் இயக்குனரான லோகேஷ் வெளியிட்ட பதிவில், ‛‛எனது சினிமா பயணத்தில் கூலி படம் சிறப்பானதாக இருக்கும். ரஜினிகாந்த் இணைந்ததும் எல்லோரும் அவர்களின் அன்பை காட்டினர். அதுவே இப்படம் சிறப்பாக உருவாக காரணம். இந்த வாய்ப்பிற்காக என்றும் நன்றியுடன் இருப்பேன். உங்களுடன் பகிர்ந்த உரையாடல்களை மறக்க முடியாத பொக்கிஷமாக வைத்திருப்பேன். எங்களை ஊக்கப்படுத்தியதற்கு என் இதயத்தில் இருந்து நன்றி சொல்கிறேன். இந்த 50 ஆண்டுகளில் உங்களை நேசிக்கவும், கற்கவும், உங்களுடன் வளரவும் செய்ததற்கு வாழ்த்துகள்'' என குறிப்பிட்டுள்ளார்.
48 days ago
48 days ago
48 days ago