உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம்

அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று(ஆக., 14) உலகம் முழுக்க ‛கூலி' படம் வெளியானது. ரஜினிக்கு சினிமாவில் இது 50வது ஆண்டு என்பதால் இந்த படத்திற்கு கூடுதல் சிறப்பு. ரஜினி உடன் சத்யராஜ், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சவுபின் சாகிர், கன்னட நடிகர் உபேந்திரா, ஹிந்தி நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் வெளியாகி வரவேற்பை பெற்று இருந்தது.

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. முதல்காட்சி காலை 9 மணிக்கே துவங்கியது. ரஜினி ரசிகர்கள் காலை முதலே படத்தை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.

அதேசமயம் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மற்ற மாநிலங்களில் காலை 5, 6 மணிக்கே முதல்காட்சி துவங்கிவிட்டது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன. குறிப்பாக இந்தப்படம் ‛ஏ' சான்று பெற்று இருப்பதால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் உடன் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்காட்சி முடிந்ததும் படம் எப்படி இருக்கும் என்ற நிலவரம் தெரியவரும். தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வேறு வருவதால் படத்திற்கான முன்பதிவும் ஆன்லைனில் சிறப்பாகவே உள்ளது. அதனால் நான்கு நாட்களிலேயே படத்தின் வசூல் 300 முதல் 400 கோடியை தாண்ட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

kuna
2025-08-14 12:47:48

ஏன் டலீவர பெத்த தறுதல பணம் கொடுத்தா