78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை
ADDED : 48 days ago
தெலுங்கு சினிமாவில் அறிமுகமான நடிகை கிரித்தி சனோன், அதன்பிறகு ஹிந்தியில் முன்னணி நடிகையாகி விட்டார். தில்வாலே, ஹவுஸ்புல் 4, மிமி, ஆதிபுருஷ் என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுசுக்கு ஜோடியாக தேரே இஸ்க் மெய்ன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் மும்பையில் உள்ள பாந்த்ரா கடற்கரை பகுதியில் ஒரு சொகுசு பங்களா வாங்கி இருக்கிறார் க்ரித்தி சனோன். 7,300 சதுர அடி கொண்ட இந்த பங்களாவின் விலை 78 கோடியாம். அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள சொகுசு பங்களாவில் ஆறு கார் பார்க்கிங் வசதி இருப்பதோடு, விருந்தினர் தங்குவதற்கு தனி காட்டேஜ் சிஸ்டமும் உள்ளதாம்.