உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு

நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு

தெலுங்கு சினிமாவில் இளம் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. அதேப்போல் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல்படம் ‛கீதா கோவிந்தம்'. இந்த படத்தில் ஏற்பட்ட நட்பு தான் தற்போது இவர்களுக்குள் காதல் வரை நெருக்கமாகி உள்ளது. ஆனால் இதை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அவர்கள் பதிவிடும் போட்டோக்கள் அதை உறுதி செய்து போன்றே அமைந்துள்ளன. பரசுராம் இயக்கிய கீதா கோவிந்தம் படம் 2018ல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்தப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதுபற்றி அந்த படத்தில் பணியாற்றியபோது எடுத்த போட்டோக்களை பகிர்ந்து நடிகை ராஷ்மிகா, ‛‛கீதா கோவிந்தம் எப்போதுமே எனக்கு சிறந்த படம். 7 ஆண்டுகள் ஆன பின்னரும் இந்த போட்டோக்களை வைத்திருப்பதை நம்ப முடியவில்லை. இந்தபடம் உருவாக காரணமாக இருந்த அனைவரையும் நினைத்து பார்க்கிறேன். படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆனதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் கீதா கோவிந்தம்-ன் 7 ஆண்டுகளுக்காக மகிழ்ச்சி'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !