சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா
ADDED : 47 days ago
தன் ஆத்துக்கார இயக்குனரின் படத்தில் நடிப்பதாக சொல்லி, பின், கதை பிடிக்கவில்லை என, தல நடிகர் பின்வாங்கிய போது, அவருக்கு எதிராக கொந்தளித்ததோடு, அவரது நடிப்பையும் கண்டபடி விமர்சித்தார், தாரா நடிகை.
அச்சமயம், மேற்படி நடிகருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என, அம்மணிக்கு இயக்குனர் ஒருவர் அழைப்பு விடுத்தபோது, உடனே, 'கிரீன் சிக்னல்' போட்டு உள்ளார்.
ஆனால், இதற்கு தாராவின் ஆத்துக்காரர் தடை போட்டபோதும், ஏற்காமல், 'உங்கள் படத்தில், தல நடிக்காதது உங்கள் தனிப்பட்ட விஷயம். அதனால், அதை மனதில் கொண்டு அவருடன் இணைந்து நடிப்பதற்கு ஒருபோதும் நான் மறுக்க மாட்டேன். சரிந்து வரும் என் மார்க்கெட்டை காப்பாற்ற, தல நடிகரின் படம் தேவைப்படுகிறது...' என, 'கண்டிஷன்' ஆக சொல்லியுள்ளார், தாரா நடிகை.