உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 6 கோடியில் எடுத்து 100 கோடி வசூல் செய்த கன்னட படம் ; காந்தாராவுக்கு பின் அடுத்த சாதனை

6 கோடியில் எடுத்து 100 கோடி வசூல் செய்த கன்னட படம் ; காந்தாராவுக்கு பின் அடுத்த சாதனை


கன்னட சினிமாவை பொறுத்தவரை கர்நாடக எல்லைக்குள்ளேயே ஒரு காலகட்டத்தில் சுருங்கி இருந்தது. கேஜிஎப் படத்தின் வெற்றிக்கு பிறகு தன் எல்லையை விரிவுபடுத்தியதுடன் 100 கோடி வசூல் கிளப் என்கிற புதிய ஏரியாவிலும் முதன்முறையாக நுழைந்தது. அதன் பிறகு வெளியான காந்தாரா திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று 100 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் கடந்த மாதம் கன்னடத்தில் வெளியான 'சூ ப்ரம் சோ' என்கிற படம் 25 நாட்களில் 100 கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தி உள்ளது. இத்தனைக்கும் இந்த படம் வெறும் ஆறு கோடி பட்ஜெட்டில் தான் தயாரானது.

இந்த படத்தை இயக்குனர் ஜேபி துமினாடு என்பவர் இயக்கியுள்ளார். பிரபல இயக்குனரும் நடிகருமான ராஜ் பி.ஷெட்டி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‛கூலி ,வார் 2' திரைப்படங்களின் ஆதிக்கத்திலும் கூட இந்த படத்திற்கான வசூல் நிலவரம் குறையாமல் இருப்பதாக திரையரங்கு வட்டாரத்தில் ஆச்சரியத்துடன் பேசிக்கொள்கிறார்கள். ஹாரர் கலந்த காமெடி படமாக அதே சமயம் எதிர்பாராத ட்விஸ்ட் அடங்கிய படமாக இருப்பதால் ரசிகர்களை இந்த படம் வெகுவாக ஈர்த்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !