அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்'
ADDED : 46 days ago
பாலிவுட்டின் பிரபல நடிகை அனன்யா பாண்டே. இவர் அளித்த ஒரு பேட்டியில் அழகு தொடர்பாக பேசி உள்ளார். அதில், ‛‛மனநலம் நன்றாக இருந்தால் தான் முகம் அழகாக இருக்கும். பணிகளை சிறப்பாக செய்ய முடியும். இதில் நான் அதிக அக்கறை எடுத்துக் கொள்வேன். இதற்கு முதலில் வலைதளங்களில் இருந்து விலகி இருக்கணும். என்னை அழகாக வைத்துக் கொள்ள தினசரி நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வேன். மேலும் புது ஆடைகள் அணிவது, பேஷனில் கவனம் செலுத்து, பிடித்த வேலைகளை செய்து எப்போதும் என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வேன்'' என்கிறார்.