உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை

தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை

விஜயகாந்தின் 100வது படமான ‛கேப்டன் பிரபாகரன்' நாளை மறுநாள் சுமார் 500 தியேட்டர்களில் ரீ-ரிலீஸாகிறது. இப்படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இப்பட இயக்குனர் ஆர்கே செல்வமணி, தமிழ் சினிமாவை தற்போது அழித்து வரும் நிகழ்வு பற்றி பேசினார்.

அவர் கூறுகையில், ‛‛ஒருவர் 100 கோடி சம்பளம் வாங்கிவிட்டால் உடனே எனக்கும் ரூ.100 கோடி சம்பளம் வேண்டும் என நினைக்கிறார்கள். ஒரு படம் 1000 கோடி வசூலித்துவிட்டால் உடனே என் படமும் 1000 கோடி வசூலிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். நல்ல படம் நிச்சயம் ஓடும். ரசிகர்களுக்கு அதுபோன்ற படங்களையே நாம் தர வேண்டும். என் படம் ஓட வேண்டும் என நினைக்கலாம், ஆனால் அதை தாண்டி ஓடி விடக்கூடாது என நினைப்பது சரியல்ல. இந்த நோய் தான் தமிழ் சினிமாவை அழிக்கிறது. ஒரு நல்ல படம் நிறைய வசூலிக்கலாம். அதேசமயம் அதிகம் வசூல் செய்த படம் நல்ல படமாகிவிடாது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !